பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இருவரும் குறித்த வீட்டிலுள்ள பொருட்களையே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.

விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல வருடங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த தாயும் மகனும் அந்த வீட்டிலுள்ள சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *