இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சித்திரை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் 50,537 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாகஇந்தியா, பிரித்தானியா , ரஷ்யா, ஜெர்மனியைச்  சேர்ந்தவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இவ்வருடத்தில் ஆறு இலட்சத்து 86,321 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *